உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரயில்களில் போதை கடத்தல் அதிகரிப்பு சோதனையை தீவிரப்படுத்தும் போலீசார்

ரயில்களில் போதை கடத்தல் அதிகரிப்பு சோதனையை தீவிரப்படுத்தும் போலீசார்

திண்டுக்கல்: வட மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு வரும் முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்களில் போதைப்பொருட்கள் கடத்தல் சில நாட்களாக அதிகரித்துள்ளது. இதனை தடுக்க ரயில்வே போலீசார் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.கஞ்சா, குட்கா, மது போன்ற போதைப்பொருட்கள் ஆந்திரா உள்ளிட்ட வட மாநிலங்களிலிருந்து ரயில்களில் அதிக அளவில் தமிழகத்திற்கு கடத்தி வரப்படுகின்றன. திண்டுக்கல் ஸ்டேஷனில் முக்கிய ரயில்களில் சில மாதங்களாக போதைப்பொருட்களை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர். ரயில்களில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க ரயில்வே போலீஸ் டி.ஜி.பி., வன்னியப்பெருமாள், ஐ.ஜி., பாபு ஆகியோரது அறிவுறுத்தலின்படி ரயில்வே போலீசார் சோதனையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.திண்டுக்கல் வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்களில் இன்ஸ்பெக்டர் துாயமணி வெள்ளைச்சாமி, எஸ்.ஐ., பாஸ்கரன் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டு 4 மாதங்களில் 50 கிலோ கஞ்சா, 110 கிலோ குட்கா, 20 லிட்டர் மதுபானம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். கஞ்சா கடத்தியதாக 3, மதுபானம் கடத்தியதாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பறிமுதல் போதைப்பொருட்களில் கஞ்சாவை போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடமும், குட்காவை உணவு கடத்தல் தடுப்பு பிரிவினரிடமும், மதுபானங்களை மதுவிலக்கு பிரிவினரிடமும் ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர்.இப்போதைப்பொருட்கள் பெரும்பாலும் ஒடிசா, புருலியா, கச்சகுடா, ஹவுரா, ஆந்திரா போன்ற வட மாநிலங்களிலிருந்து வரும் ரயில்களில் அதிகமாக பறிமுதல் செய்யப்படுகின்றன எனவும், போதைப்பொருட்கள் கடத்தலை முற்றிலும் ஒழிக்கும் வகையில் ரயில்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது எனவும் ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை