உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கழிவறை தொட்டி கழிவுகளை உரமாக்க திறந்தவெளிகளில் கொட்டுவதால் சீர்கேடு

கழிவறை தொட்டி கழிவுகளை உரமாக்க திறந்தவெளிகளில் கொட்டுவதால் சீர்கேடு

மனித நாகரிக வளர்ச்சியில் தற்போது மக்காத குப்பைகளின் ஆதிக்கம் அதிகரித்து பூமியை பாழ்படுத்தும் விகிதம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதனால் பல்வேறு நோய்கள் மனிதருக்கும், பிற உயிரினங்களுக்கும் ஏற்படுகிறது. சில பேரூராட்சி, ஊராட்சிகளில் பணியாளர்களை அமர்த்தி மக்கும் பொருட்களை துண்டு, துண்டாக வெட்டி அதற்குரிய தொட்டியில் சானம், நுண்ணுயிர் கரைசல் கலந்து பல நாட்கள் வைத்து பின்னர் ஜல்லடையில் சலித்து மண் புழு உரமாக மாற்றுகின்றனர். இது ஒருபுறமிருக்க இன்றும் திறந்தவெளிகளை கழிப்பிடமாக பயன்படுத்தும் முறை பரவலாக இருக்கிறது. இதை ஒழிக்க சில ஆண்டுகளில் அரசு சார்பில் வீடுகளில் தனிநபர், பொது இடங்களில் ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்கள் அமைத்து திறந்தவெளி கழிப்பிட முறையை ஒழிக்க அரசு அதிகம் கவனம் செலுத்துகிறது. இதன் பலனாக இன்றளவில் பெரும்பாலான வீடுகளில் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. நிரம்பிவிடும்போது தனியார் வாகனங்களை அழைத்து பணம் தந்து அகற்றுகின்றனர். ஆனால் இந்த செப்டிங் டேங்க் வாகன ஓட்டிகள் ஆங்காங்கே மறைவான ரோட்டோரம், நீர்நிலையில் இவற்றை திறந்துவிடுகின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதை முறைப்படுத்தி அரசு சார்பில் சேகரிப்பு நிலையங்களை ஏற்படுத்தி உரமாக்கிட வேண்டும். மாவட்ட நிர்வாகம் இதன்மீது கவனம் செலுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை