உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 50 ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் பூ எருவாட்டி திருவிழா

50 ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் பூ எருவாட்டி திருவிழா

வத்தலக்குண்டு: கீழகோவில்பட்டியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரியமாக நடந்து வரும் பூ எருவாட்டி திருவிழா இந்தாண்டும் நடந்தது.ஆண்டுதோறும் தை பொங்கல், மாட்டுப்பொங்கல் கொண்டாடி வருவது போல் வத்தலக்குண்டு அருகே கீழகோவில்பட்டியில் சங்க கால இலக்கியங்களில் காணப்படும் பூ எருவாட்டி திருவிழா 50 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. மார்கழி மாதம் வீடுகள் முன்பாக கோலமிட்டு பூக்களை கோலத்தின் நடுவில் வைத்து அலங்கரிப்பர். அன்று மாலையே பூக்களை பசு சாணத்தில் உருவாகும் எருவாட்டியில் அலங்காரமாக பூக்களை ஒட்டி காய வைப்பர். இவ்வாறு மார்கழி மாதம் முழுவதும் சேமிக்கப்பட்ட பூ எருவாட்டி தை மூன்றாம் நாளில் ஊர் காக்கும் தெய்வமான பகவதி அம்மன் கோயில் முன்பாக வைத்து கும்மியடித்து, கிராமத்தின் அருகில் ஓடும் மருதா நதியில் எருவாட்டி மீது சூடம் ஏற்றி தண்ணீரில் விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை