உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  கோழி பண்ணை கழிவால் கால்நடைகளுக்கு பாதிப்பு

 கோழி பண்ணை கழிவால் கால்நடைகளுக்கு பாதிப்பு

வடமதுரை: கோழி பண்ணை கழிவுகளை முறையாக அகற்றாவிடின் கால்நடைகளுக்கு நோய் பாதிப்பு ஏற்படும் என கால்நடை பராமரிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். மாவட்டத்தில் சில பகுதிகளில் கோழிப்பண்ணைகளில் இறந்த கோழிகளையும், கழிவுகளையும் சுகாதாரமற்ற முறையில் அகற்றுகின்றனர். இதனால் இறந்த கோழிகளின் மூலம் 'கிளாஸ்ரிடியம் பொட்டுலினம்' எனும் பாக்டீரியா கிருமி ஏற்படுத்தும் நச்சு மூலம் கால்நடைகளில் பாதிப்பு ஏற்படுகிறது. கோழிப்பண்ணையாளர்கள் இறந்த கோழிகளையும், கழிவுகளையும் ஆழமான குழி தோண்டி சுண்ணாம்பு இட்டு புதைக்கவோ , எரியூட்டுதல் முறையிலோ முறையாக அகற்ற வேண்டும். இவ்வாறான பகுதிகளில் கால்நடை வளர்ப்போர் தங்களது ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம். வெளியில் இருந்து வாங்கிய உலர் தீவனங்களை மட்டும் கால்நடைகளுக்கு தர வேண்டும் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை