உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  தனியார் பஸ்கள் தகராறு வழக்கறிஞர்கள் முற்றுகை

 தனியார் பஸ்கள் தகராறு வழக்கறிஞர்கள் முற்றுகை

வேடசந்துார்: புளியமரத்துக்கோட்டையில் இருந்து கோடாங்கிபட்டி வழியாக வேடசந்துாருக்கு தனியார் மினி பஸ் செல்கிறது. இதே ரூட்டில் தனியார் ரூட் பஸ்சும் செல்கிறது. இரு தரப்பினருக்கும் பிரச்னை ஏற்பட்டதால் வேடசந்துார் போலீசில் புகார் அளித்தனர். விசாரணையில் மினி பஸ் சார்பில் அதன் உரிமையாளர் , தனியார் ரூட் பஸ் சார்பில் வழக்கறிஞர் செல்வகுமார் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையின் போது கோபமடைந்த மினி பஸ் உரிமையாளர், வழக்கறிஞர் செல்வகுமாரை கூடுதலாக பேசி உள்ளார். ஆத்திரமடைந்த செல்வக்குமார் சக வழக் கறிஞர்களுடன் போலீஸ் ஸ்டேஷன் முன்பு முற்றுகையிட்டார். போலீசார் முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை