உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கேரளா செல்லும் ஆத்துார் மரவள்ளி கிழங்குகள் கிலோ 14 ரூபாய் வரை கொள்முதல்

கேரளா செல்லும் ஆத்துார் மரவள்ளி கிழங்குகள் கிலோ 14 ரூபாய் வரை கொள்முதல்

ஆத்துார் : சேலம், கேரள மாநிலத்திற்கு விற்பனைக்காக அனுப்பபடும் மரவள்ளி கிழங்கு கிலோ 10 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.திண்டுக்கல் மாவட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறையாக உள்ள நிலையில் விவசாயிகள் மரவள்ளி கிழங்கு சாகுபடியை விரும்பி செய்கின்றனர். சிப்ஸ், துரித உணவு தயாரிப்பு உள்ளிட்ட தேவைகளுக்காக இதன் கொள்முதல் அதிகரித்து உள்ளது. ஆத்துார், செம்பட்டி, வேலக்கவுண்டன்பட்டி, வீரக்கல், உள்ளிட்ட கிராமங்களில் பரவலாக இச்சாகுபடி நடக்கிறது. 10 மாதம் வளர்ச்சி காலமாக கொண்ட இது வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூக்களுக்கு இணையாக இதன் சாகுபடி பரப்பும் அதிகரித்து வருகிறது. தென்னை விவசாயிகள் பலரும் இதை ஊடுபயிராகவும் மேற்கொண்டு வருகின்றனர்.ஆத்துார் ஒன்றியம் வீரக்கல் பகுதியில் சாகுபடி செய்யப்படும் மரவள்ளி கிழங்கு, சேலம், கேரள மாநிலத்திற்கு லாரிகள் மூலம் அனுப்பப்படுகிறது. கேரள மட்டுமின்றி தமிழகத்தில் மாட்டுத்தீவனம், ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயாரிப்பு போன்றவற்றிற்கும் பயன்படுத்தப்படுகிறது.வீரக்கல் பகுதி விவசாயிகள் கூறுகையில், 'மரவள்ளி கிழங்கு சாகுபடியில் 20 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சுதல் போதுமானது. வெயில் பகுதியில் இவற்றின் செடியில் அதிக கிழங்குகள் கிடைக்கும். கடந்தாண்டை விட கிலோவிற்கு 3 ரூபாய் வரை கூடுதலாக கிடைக்கிறது. தரத்திற்கு ஏற்ப கிலோ 10 முதல் 14 ரூபாய் வரை கொள்முதலாகிறது ' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !