உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  பழநியில் அபிஷேக பால் வழங்க கட்டுப்பாடு

 பழநியில் அபிஷேக பால் வழங்க கட்டுப்பாடு

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி, திருஆவினன்குடி கோயிலில் அபிஷேகத்திற்கு உணவு பாதுகாப்புத்துறை தரச்சான்று பால் மட்டுமே அனுமதிக்கப்படும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள திருஆவினன்குடி கோயில் அடிவாரத்தில் உள்ளது. கால பூஜைகளுக்கு பக்தர்கள் பால் வழங்குவர். இந்நிலையில் கோயில் நிர்வாகத்தின் சார்பில் 'திருஆவினன்குடி கோயிலில் உணவு பாதுகாப்புத்துறை தரச் சான்று பெற்ற பால் மட்டுமே சுவாமி அபிஷேகத்திற்கு அனுமதிக்கப்படும்' என அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. கோயில் அருகே சில இடங்களில் பக்தர்களுக்கு அபிஷேகத்திற்கு விற்கப்படும் பால், தரம் இல்லாததாக உள்ளது. இந்த பாலை அபிஷேகத்திற்கு பயன்படுத்துவதால் மூலவர் மற்றும் பரிகார தெய்வ சிலைகள் சேதம் அடையும் வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே தரமற்ற அபிஷேக பாலை பக்தர்களுக்கு வழங்குவதை தவிர்க்கவும் சிலைகளை பாதுகாக்கவும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ