| ADDED : ஆக 16, 2024 05:01 AM
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தேசிய,மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி பகுதிகளில் உள்ள ரோடுகளில் ஊர்களுக்குச் செல்லும் வழிகாட்டும் பெயர் பலகைகளை மறைக்கும் வகையில் வளர்ந்த மரக்கிளைகளை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்டம் முழுவதும் பல தேசிய நெடுஞ்சாலைகள் மாநில நெடுஞ்சாலைகள் உள்ளன. இந்த ரோடுகளிலிருந்து பிரிந்து செல்லும் வழித்தடங்கள்,கிராமங்கள் ஆகியவற்றை வாகன ஓட்டிகளுக்கு தெரிவிக்கும் வகையில் வழிகாட்டும் பேனர்கள்,பலகைகள் உள்ளது. இவை பல இடங்களில் வாகன ஓட்டிகளுக்கு தெரியாத வகையில் மரக்கிளைகள் மறைத்துள்ளது. பல இடங்களில் விளம்பர போஸ்டர்களை ஒட்டி ஊர்களின் பெயர்களை மறைக்கின்றனர். இன்னும் சில இடங்களில் இந்த பெயர் பலகைகள் சேதம் அடைந்து காணப்படுகிறது. இவ்வாறு இருப்பதால் வெளியூர்களிலிருந்து புதிதாக வரும் வாகன ஓட்டிகள் எந்தப் பக்கம் செல்வது என குழப்பம் அடைந்து மிகவும் அவதிக்கு ஆளாகின்றனர். பெயர் பலகை அருகில் வந்து வாகனத்தை நிறுத்தி எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை பார்த்து பிறகு செல்ல வேண்டி உள்ளது. மறைக்கும் மரக்கிளைகளை வெட்டி பெயர் பலகைகள் தெரியும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுமாற்றம் ஏற்படுகிறதுநாம் எவ்வளவுதான் வளர்ச்சி அடைந்தாலும் ஊர் பெயர் பலகைகளில் போஸ்டர்களை ஒட்டி மறைப்பது இன்றளவும் நடந்து கொண்டுதான் உள்ளது. நெடுஞ்சாலைகளில் உள்ள பெயர் பலகைகளை மறைக்கும் வகையில் மரக்கிளைகள் வளர்ந்துள்ளன. இதனால் வெளியூர், வெளிமாநிலங்களிலிருந்து வரும் செல்லும் வாகன ஓட்டுனர்கள் எந்த பக்கம் செல்வது என அறிந்து கொள்ள சிரமப்படுகின்றனர். எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை தடுமாறி கண்டுபிடிக்க வேண்டி உள்ளது. பலகைகளை மறைக்கும் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். - முருகேசன்,டிவி மெக்கானிக்,ஒட்டன்சத்திரம்.................................