உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  திண்டுக்கல் நகைக்கடையில் ரூ.1.43 கோடி நகைகள் திருட்டு

 திண்டுக்கல் நகைக்கடையில் ரூ.1.43 கோடி நகைகள் திருட்டு

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் உள்ள ஒரு நகைக்கடையில் ரூ.1.43 கோடி மதிப்புள்ள 1.5 கிலோ தங்கநகைகள் திருடு போனது. இதில் தொடர்புடைய கடை ஊழியர்கள் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் மூவரை கைது செய்தனர். திண்டுக்கல் வரதராஜ் காம்ப்ளக்ஸில் செயல்படும் இந்த நகைக்கடையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த ரேணுகேசன் 62, துணை பொது மேலாளராக உள்ளார். கடையின் விற்பனை நேரம் முடிந்த பிறகு தளம் வாரியாக கடை ஊழியர் வைஷ்ணவி நகைகளை தணிக்கை செய்து சரிபார்ப்பது வழக்கம். டிச., 2ல் தரைத்தளத்தில் நெக்லஸ் பிரிவில் தங்க நகைகளை தணிக்கை செய்ததில் 1.5 கிலோ எடை கொண்ட 45 தங்க நெக்லஸ்கள் மாயமானது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மதிப்பு ரூ. ஒரு கோடியே 43 லட்சத்து 23 ஆயிரத்து 22 ஆகும். இதுகுறித்து ரேணுகேசன் ஊழியர்களிடம் நடத்திய விசாரணையில் தரைத்தளத்தின் மேலாளர் பாலசுப்பிரமணியன் விடுமுறையில் இருந்த போது பொறுப்பு மேலாளராக இருந்த சிவா 29, அதே தளத்தில் பணியில் இருந்த காசாளர் கார்த்திகேயன் 43, விற்பனையாளர் விநாயகன் 36, மூலமாக வாடிக்கையாளர்களுக்கு மாடல் காண்பிப்பதாக கூறி நகைகளை எடுத்துச்சென்றது தெரிந்தது. காசாளர்கள் பாண்டியன், சரவணக்குமார், கார்த்திக், நகை மதிப்பீட்டாளர் செல்வராஜ் ஆகியோர் உடந்தையாக செயல்பட்டுள்ளனர். மேலும் நகைகளை சேதமடைந்தவை என கணக்கு காண்பித்து விற்று பணத்தை பங்குப்போட்டுக் கொண்டதும் விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்த புகாரில் குற்றப்பிரிவு டி.எஸ்.பி., குமரேசன், இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி விசாரித்து தலைமை விற்பனையாளர் சிவா, காசாளர் கார்த்திகேயன், விற்பனையாளர் விநாயகன் ஆகியோரை கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் நான்கு ஊழியர்களை தேடி வருகின்றனர். 80 கிராம் நகைகள் மீட்கப்பட்ட நிலையில் மீதமுள்ள நகைகளை மீட்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை