உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரூ.5 கோடி கோயில் நிலம் மீட்பு

ரூ.5 கோடி கோயில் நிலம் மீட்பு

பழநி: பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமான ரூ.ஐந்து கோடி மதிப்புள்ளான சொத்து மீட்கப்பட்டது.பழநி மேற்கு கிரி வீதி, வடக்கு கிரி வீதி, அய்யம்புள்ளி ரோடு சந்திக்கும் இடத்தில் முருகன் கோயிலுக்கு சொந்தமான 1245 சதுரடி நிலம் 50 ஆண்டுகளுக்கு மேலாக தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. இச்சொத்துக்கள் உச்சநீதிமன்ற உத்தரவின் படியும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இரண்டாம் மேல்முறையீட்டு மனுக்களின் தீர்ப்பின் படியும் ஜன.5ல் ஆக்கிரமிப்பு காரர்களை வெளியேற்றி மீட்கபட்டது. நிலத்தின் மதிப்பு ரூ.5 கோடி ஆகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ