உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கூடுதல் விலைக்கு மது விற்பனை

கூடுதல் விலைக்கு மது விற்பனை

திண்டுக்கல்: மதுரை மண்டலத்தில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்ற டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் 18 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.மதுரை மண்டலத்திற்குட்பட்ட மதுரை வடக்கு, தெற்கு, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில் ரூ.10 முதல் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக புகார்கள் சென்றன. இதைதொடர்ந்து டாஸ்மாக்களில் கூடுதல் விலை விற்பனை தடுப்பு ஆய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக பிற மாவட்டங்களை சேர்ந்த டாஸ்மாக் மாவட்ட மேலாளர் குழுக்களை டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் விசாகன் உத்தரவின்படி மதுரை மண்டல மேலாளர் அருண்சத்யா நியமித்தார். இந்த குழுக்கள் ஆய்வில் கூடுதல் விலைக்கு மது விற்றது தெரியவந்தது. அதன்படி மண்டலம் முழுவதுமாக 18 டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மண்டல மேலாளர் அருண்சத்யா பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ