| ADDED : ஜன 11, 2024 04:08 AM
திண்டுக்கல : வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு ,தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தங்களது கல்வித் தகுதியினைப் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருப்பவர்களுக்கு அரசு உதவித்தொகை வழங்குகிறது. அதன்படி உதவித்தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் அதே மையத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது.மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை பதிவு செய்து ஓராண்டு பூர்த்தி அடைந்திருத்தல் வேண்டும். இத்தொகை பெற ஆதிதிராவிடர்,பழங்குடியினர் 45 வயதிற்குள்ளும், இதர வகுப்பினர் 40 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.72,000.தமிழகத்திலேயே கல்வி முடித்தவர்களாகவும், வேறு எந்தப் பணியிலும் ஈடுபடாதவர்களாகவும் இருக்க வேண்டும். பள்ளி, கல்லுாரியில் சென்று படிப்பவராக இருக்கக்கூடாது. இத்தகுதியுள்ளோர் நேரில் வந்து விண்ணப்ப படிவத்தினை பெற்றுக்கொள்ளலாம். https://tnvelaivaaippu.gov.inwww.tnvelaivaaippu.gov.inஎன்ற இணையதளத்தில் படிவத்தினை பதிவிறக்கம் செய்து வரும் பிப்.28க் குள் வழங்க வேண்டும்.