உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடை பிரையன்ட் பூங்காவில் இரண்டாம் கட்ட மலர் நாற்று நடவு

கொடை பிரையன்ட் பூங்காவில் இரண்டாம் கட்ட மலர் நாற்று நடவு

கொடைக்கானல், : கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 61 வது மலர் கண்காட்சிக்காக இரண்டாம் கட்ட மலர் நாற்று நடவு செய்யப்பட்டது.சுற்றுலா தலமான கொடைக்கானலில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி நடப்பது வழக்கம். ஏப்ரல், மே மாதத்தில் லட்ச கணக்கான பயணிகள் பூக்களை ரசித்து மகிழ்வர். இந்நிலையில் 61 வது மலர் கண்காட்சிக்காக சில மாதங்களாக மலர் படுகைகள் தயார் செய்யப்பட்டு வந்தன. முதற்கட்டமாக 6 மாதத்தில் பூத்து குலுங்கும் மலர் நாற்றுக்களான பிங்க் ஆஸ்டர், ஆர்னத்திகேலம், வெர்பினா, சீப் டங்க், கஜேனியா, அஸ்டோமேரியா, சால்வியா உள்ளிட்ட மலர் செடிகள் நடவு செய்யப்பட்டன. இரண்டாம் கட்டமாக உயர்ரக டேலியா நாற்றுக்கள் 4 ஆயிரத்து 500, டேலியா கிழங்குகள் 5 ஆயிரத்து 500 படுகைகளில் பணியாளர்கள் நடவு செய்தனர். பணிகளை தோட்டக்கலை துணை இயக்குனர் காயத்ரி துவக்கி வைத்தார். தோட்டக்கலை உதவி இயக்குனர் கயல்விழி,தோட்டக்கலை அலுவலர் சிவபாலன் உடனிருந்தனர். எதிர்வரும் மாதங்களில் ரோஜா கவாத்து , 3ம் கட்ட மலர் நாற்று நடவு நடக்கும் என தோட்டக்கலை துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை