உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கழிவுநீர் வாய்க்கால்- பூமி பூஜை

கழிவுநீர் வாய்க்கால்- பூமி பூஜை

சாணார்பட்டி: -சாணார்பட்டி அருகே அஞ்சுகுழிபட்டி தும்பைகுளம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்ட நிதியிலிருந்து ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது. மாவட்ட கவுன்சிலரும் தி.மு.க., மாவட்ட பொருளாளருமான க.விஜயன் தலைமை வகித்தார் . பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, தி.மு.க.,மாவட்ட துணைச் செயலாளர் சுந்தர்ராஜன், ஒன்றிய குழு தலைவர் பழனியம்மாள் சுந்தரம், அஞ்சுகுழிப்பட்டி ஊராட்சி தலைவர் தேவி ராஜாசீனிவாசன், ஒன்றிய கவுன்சிலர் முருகேசன், ஆண்டிச்சாமி, ஊராட்சி செயலர் கோபாலகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை