| ADDED : நவ 19, 2025 07:22 AM
திண்டுக்கல்: '' பீஹாரில் பா.ஜ.,வெற்றிக்கு எஸ்.ஐ.ஆர்.,தான் காரணம்'' என அ.தி.மு.க.,முன்னாள் அமைச்சர் சீனிவாசன் கூறினார். திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: பீஹார் போன்று தமிழகத்திலும் வெற்றி கிடைக்கும். 220 இடங்களுக்கு மேல் அ.தி.மு.க., வெற்றிபெறும். பழனிசாமி 2026ல் முதலமைச்சராக பதவி ஏற்பார். எஸ்.ஐ. ஆர்.,ஐ எதிர்க்க வேண்டியதில்லை. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சாதாரண நிகழ்வுதான் இது. காங்., ஆட்சியிலும் இது நடந்திருக்கிறது. எதற்காகஎஸ்.ஐ.ஆர்.,ஐ ராகுல்காந்தி, தமிழக முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கின்றனர் என தெரியவில்லை. இதனால் எந்த பாதிப்பும் இல்லை. அவர்கள் புலி வாலை பிடித்துவிட்டு விட முடியாமல் தவிக்கிறார்கள். உண்மை என்னவென்று தமிழக மக்களுக்கு தெரியும். 234 தொகுதிகளிலும் சேர்த்து லட்சக்கணக்கான ஓட்டுச்சாவடிகள் உள்ளது. அதற்காக ஆட்களை நியமனம் செய்து சம்பளம்கொடுத்தால்தான் வேலை நடக்கும். அரசு ஊழியர்களை வைத்து வேலை வாங்குவது எந்த வகையிலும் சரியானது அல்ல. அரசுஊழியர்கள் செய்வது நுாற்றுக்கு நுாறு சரி. எஸ்.ஐ.ஆரால் ஒரு கோடி பேருக்கு ஓட்டுரிமை இல்லாமல் போகும் என சீமான் கூறுவதை விடவும் அதிகமான ஓட்டுகள் குறையும். திண்டுக்கல் தொகுதியில் மட்டும் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ஓட்டுகள் பாதிக்கும். பீஹாரில் பா.ஜ., வெற்றிக்கு எஸ்.ஐ.ஆர்.,தான் காரணம். இவ்வாறு கூறினார்.