உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  சர்வர் பாதிப்பால் எஸ்.ஐ.ஆர்., பதிவேற்றம் சுணக்கம்

 சர்வர் பாதிப்பால் எஸ்.ஐ.ஆர்., பதிவேற்றம் சுணக்கம்

பழநி: பழநி சட்டசபை தொகுதியில் எஸ்.ஐ.ஆர் படிவம் பதிவேற்றுவதில் சர்வர் பாதிப்பால் பணிகள் தேக்கம் அடைகிறது. எஸ்.ஐ.ஆர் படிவங்களை பி.எல்.ஓ. மூலம் பெறப்பட்டு பதிவேற்றும் பணி நடைபெற்று வருகிறது. பழநி தாலுகா அலுவலகத்தில் கல்லூரி மாணவர்கள், நகராட்சி பணியாளர்கள் மூலம் பதிவேற்றும் பணி நடைபெறுகிறது. தற்போது 60,000, எஸ்.ஐ.ஆர் படிவங்களை பதிவேற்றம் செய்ய 60 பகுதிகளாக பணிபுரிந்து வருகின்றனர். இப்பணியில் அவ்வப்போது சர்வர் வேகக் குறைவு, செயல்பாடு இழப்பு காரணமாக படிவங்களில் பதிவேற்றுவதில் சுணக்கம் ஏற்படுகிறது. இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி