| ADDED : ஜன 03, 2024 06:45 AM
திண்டுக்கல்: ''திண்டுக்கல்லில் புதிய வருவாய் தாசில்தார் அலுவலக கட்டட பணிகள் 11 மாதங்களில் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்,'' என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி பேசினார்.திண்டுக்கல் மேற்கு தாசில்தார் அலுவலக வளாகத்தில் ரூ.3.85 கோடி மதிப்பில் புதிய வருவாய் தாசில்தார் அலுவலக கட்டடம் பணிக்கு அடிக்கல் நாட்டிய அவர் பேசியதாவது: மக்கள்தொகை பெருக்கத்திற்கு ஏற்ப அரசு அலுவலகங்கள் வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்படுகின்றன. அந்த வகையில் திண்டுக்கல் மேற்கு தாசில்தார் அலுவலக வளாகத்தில் வருவாய் தாசில்தார் அலுவலக கட்டடம் ரூ.3.85 கோடியில் பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட உள்ளது. இதன் பணிகள் 11 மாதங்களில் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்றார். கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்தார்.திண்டுக்கல் எம்.பி., வேலுச்சாமி, பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார் முன்னிலை வகித்தார். ஆர்.டி.ஒ., சிவக்குமார், செயற்பொறியாளர் தங்கவேல், உதவி செயற்பொறியாளர் சரவணக்குமார், தாசில்தார் மீனாதேவி பங்கேற்றனர்.