உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஊரானுாரில் கோயில் கும்பாபிஷேகம்

ஊரானுாரில் கோயில் கும்பாபிஷேகம்

வடமதுரை: கொம்பேரிபட்டி ஊரானுார் கோவில்காட்டில் பெருமாயம்மாள்,கருங்கல்ஆண்டிசுவாமி,பெரிய,சின்ன கருப்பணசுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. தீர்த்த அழைப்புடன் துவங்கிய விழாவில் கால யாக பூஜைகளை தொடர்ந்து நேற்று காலை கடங்கள் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது. வடமதுரை மீனாட்சிசுந்தரேசுவரர் கோயில் அர்ச்சகர் விஷ்ணுவர்தன் தலைமையிலான குழுவினர் கும்பாபிஷேகத்தை நடத்தினர். ஊராட்சி தலைவர் ராஜரத்தினம், துணைத் தலைவர் கருப்பையா, வார்டு உறுப்பினர்கள் லட்சுமணன், பெரியசாமி, ஊரானுார் ஊர் அம்பலம் அழகர், கிராம கன்னிமார் கோயில் பூஜாரி பிச்சைமுத்து பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை