உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அங்கித் திவாரியை கஸ்டடி கேட்ட அமலாக்க துறை மனு தள்ளுபடி

அங்கித் திவாரியை கஸ்டடி கேட்ட அமலாக்க துறை மனு தள்ளுபடி

திண்டுக்கல்:திண்டுக்கல் அரசு மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் சுரேஷ்பாபுவிடம் சொத்துகுவிப்பு வழக்கிலிருந்து விடுவிப்பதாக கூறி, 40 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை டிச. 1ல் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்; மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.அமலாக்கத்துறை தரப்பில் அவர் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில், அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஜன., 2ல் மனு செய்யப்பட்டது.அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்ட மனு, நேற்று நீதித்துறை நடுவர் மோகனா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. லஞ்ச ஒழிப்பு போலீஸ் தரப்பு வழக்கறிஞர், அமலாக்கத்துறை காவலில் எடுத்து அவரை விசாரிக்க அனுமதி தர எதிர்ப்பு தெரிவித்தார்.இருதரப்பு வாதத்தையும் கேட்ட நடுவர், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை