உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பாதயாத்திரை பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லவே இல்லை

பாதயாத்திரை பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லவே இல்லை

பழநி முருகன் கோயிலில் ஜன. 25 ம் தேதி தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் பாதயாத்திரைக்கு வந்த வண்ணம் உள்ளனர். லட்சக்கணக்காண பக்தர்கள் பழநியில் கூடி வரும் நிலையில் எந்தவித அடிப்படை வசதிகளுமே தேவஸ்தான நிர்வாகம் சார்பில் செய்யப்படவில்லை. குறிப்பாக மலைமீது ஏறும் போது யானைப்பாதையில் ஒரே ஒரு கழிப்பறை மட்டுமே பயன்பாட்டில் இருக்கிறது. படிப்பாதையில் இடும்பன் கோயில் அருகே உள்ள கழிப்பபறை நீண்ட நாட்களாகவே செயல்படவில்லை. இதனால் மலையின் ஓரங்களில் பக்தர்கள் சிறுநீர் கழிப்பதால் துார்நாற்றம் வீச நோய்தொற்று ஏற்படும் சூழல் உள்ளது. தற்காலிக கழிப்பறைகள் ஏதும் பாதையாத்திரை ரோட்டிலோ, மலையைச் சுற்றிலோ இல்லை.முக்கியமாக பக்தர்கள் மலைக்குச் செல்ல பிரதானமாகப் பயன்படும் வின்ச் 2 மட்டுமே பயன்பாட்டில் இருக்கிறது. புதிதாக தயார் நிலையில் உள்ள வின்ச் 3 சோதனை ஓட்டம் உட்பட அனைத்து பணிகளும் முடிந்து ஒராண்டாகியும் இன்று வரை பயன்பாட்டிற்கு வரவில்லை. வி.ஐ.பி., டிக்கெட்டில் வருபவர்கள் வின்ஞ் வழியாகதான் வரவேண்டுமென்ற வாய்மொழி உத்தரவு தேவஸ்தான நிர்வாகம் சார்பில் போடப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகிகள், அதிகாரிகள், போலீசார் உட்பட அனைவருமே வின்ச் ரயிலை பயன்படுத்தும் சூழலில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் உருவாகி உள்ளது. 3 வது வின்ச் பயன்பாட்டிற்கு வருவதோடு அடிப்படை வசதிகளை அதிகப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை