உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அரசியலில் பாதிக்காதது யாரும் கிடையாது விஜய் இதனை தாண்டி தான் வரவேண்டும் சொல்கிறார் ஐ.ஜே.கே., தலைவர் ரவி பச்சமுத்து

அரசியலில் பாதிக்காதது யாரும் கிடையாது விஜய் இதனை தாண்டி தான் வரவேண்டும் சொல்கிறார் ஐ.ஜே.கே., தலைவர் ரவி பச்சமுத்து

திண்டுக்கல்: ''அரசியலில் வெளியில் இருந்து பார்ப்பது வேறு. அதில் பாதிக்காதது யாரும் கிடையாது. நாங்களும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளோம். இதனை தாண்டி தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் வரவேண்டும்,'' என, திண்டுக்கல்லில் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து கூறினார். அவர் கூறியதாவது: தமிழகத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு துன்புறுத்தல் என்பது இருக்காது. தமிழகம் எப்போதும் இதுபோன்ற விஷயங்களை கையில் எடுக்காது. தமிழக மக்கள் யார் வந்தாலும் வரவேற்கும் எண்ணம் கொண்டவர்கள். கூட்டணி குறித்து பெரிய கட்சிகளே இன்னும் முடிவு எடுக்கவில்லை. லோக்சபா தேர்தலில் பா.ஜ., கூட்டணியில் இருந்தோம். தொடர்வது குறித்து முடிவு செய்யவில்லை. காலங்கள் தான் பதில் சொல்லும். இதுகுறித்து பொதுக்குழு கூட்டி முடிவு செய்யப்படும். டெல்டா மாவட்டங்களில் நெல் முளைக்க தொடங்கியுள்ளது. தானியத்தை சேமிக்க வேண்டியது அரசின் கடமை. அதனை வேகமாக செய்திருக்க வேண்டும். மழை வருவதை முன்கூட்டி கணிக்கக்கூடிய பல்வேறு விஞ்ஞான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனை தாமதம் ஆக்காமல் விரைந்து செய்திருக்க வேண்டும். அரசியலில் பலர் சம்பாதிக்கும் நோக்குடன் வருகின்றனர். தி.மு.க., மத்திய அரசு எதை கொண்டு வந்தாலும் எதிர்ப்பார்கள். பெரம்பலுார் - அரியலுார் ரயில் பாதை திட்டம் செயல்படுத்த போராட்டம் நடத்தப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை