உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  இந்திய ஹாக்கி அணியில் ஒரு தமிழர் கூட இல்லை முதல்வருக்கு திண்டுக்கல் ஹாக்கி சங்க தலைவர் கடிதம்

 இந்திய ஹாக்கி அணியில் ஒரு தமிழர் கூட இல்லை முதல்வருக்கு திண்டுக்கல் ஹாக்கி சங்க தலைவர் கடிதம்

திண்டுக்கல்: தமிழகத்தில் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி நடைபெறவுள்ள நிலையில் இந்திய ஹாக்கி அணியில் ஒரு விளையாட்டு வீரர் கூட தமிழகத்தை சேர்ந்தவர் இல்லை என திண்டுக்கல் மாவட்ட ஹாக்கி சங்க தலைவர் ஞானகுரு முதல்வருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறியிப்பதாவது: தமிழகத்தில் ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி நடைபெற உள்ளது. இதற்கு தமிழக அரசு ரூ.80 கோடி செலவு செய்கிறது. ஆனால் இந்திய ஹாக்கி அணியில் ஒரு விளையாட்டு வீரர் கூட தமிழகத்தை சேர்ந்தவர் இல்லை. 1976 முதல் 2008 வரை இந்தியா ஹாக்கி சங்க தலைவராக தமிழகத்தை சேர்ந்த ராமசாமி, இந்திய ஹாக்கி சங்க பொதுச் செயலாளராக ஜோதிக்குமார் பதவி வகித்த ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டி, உலக கோப்பை, மேற்காசிய போட்டி, சர்வதேச ஹாக்கி போட்டிகளில் தமிழக வீரர்கள் 150க்கு மேற்பட்டவர்கள் இந்திய அணியில் இடம் பெற்று வெற்றிப் பெற்று வந்தனர். ஆனால் தமிழகத்தில் நடக்க உள்ள ஜூனியர் ஹாக்கி உலககோப்பை போட்டியில் இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த ஒரு விளையாட்டு வீரர் கூட இல்லை. தமிழகத்தில் பல சிறந்த ஜூனியர் ஹாக்கி வீரர்கள் இருந்த போதிலும் அவர்களை இந்திய ஹாக்கி அணியில் சேர்க்கவில்லை யென்பது அனைத்து விளையாட்டு வீரர்களிடம் வருத்தம் அளிக்கிறது என கேட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை