| ADDED : ஜன 20, 2024 05:27 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் வெவ்வேறு பகுதிகளில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மூவருக்கு சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.வடமதுரையை ரெட்டியப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சங்கர்30. 2023ல் அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியிடம் திருமண ஆசைவார்த்தை கூறி கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். வேடசந்துார் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். நீதிபதி சரண்,குற்றவாளி சங்கருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். திண்டுக்கல் ராமையன்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சிமியான்ராஜ் 53. 2021ல் அதே பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். நீதிபதி சரண்,குற்றவாளி சிமியன்ராஜூக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை,ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார். விளாம்பட்டி பகுதியை சேர்ந்த கட்டட தொழிலாளி கருப்பையா 24. 2022ல் அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். நீதிபதி சரண்,குற்றவாளி கருப்பையாவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.