தினமலர் செய்தியால் உயிர் பிழைத்த மரங்கள்
திண்டுக்கல் : திண்டுக்கல் உள் விளையாட்டரங்கம் நுழைவு பகுதியில் காய்ந்த நிலையிலிருந்த மரங்களுக்கு தினமலர் செய்தி எதிரொலியாக தண்ணீர் பாய்ச்சப்பட்டு பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல் உள் விளையாட்டு அரங்கம் நுழைவு பகுதியில் ஏராளமான மரங்கள் காய்ந்துபோய் உள்ளது. இதை பராமரிக்க எல்லா வசதிகளும் இருந்தும் சம்பந்தபட்ட அதிகாரிகள் பராமரிக்காமல் உள்ளனர். இதனால் மரங்கள் பட்டுப்போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பான செய்தி நேற்று தினமலர் நாளிதழில் வெளியானது. இதன் எதிரொலியாக திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா உத்தரவில் பணியாளர்கள் உள் விளையாட்டு அரங்கள் நுழைவு பகுதியில் பட்டுப்போகும் நிலையிலிருந்த மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சினர். இதோடு பராமரிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர். வண்டுகள் தாக்குதல் இருப்பதால் மரங்கள் காய்ந்த நிலையில் உள்ளதால் வண்டுகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா தெரிவித்தார்.