உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பதற்றமான ஓட்டுச்சாவடிகள் 193: கலெக்டர் பூங்கொடி தகவல்

பதற்றமான ஓட்டுச்சாவடிகள் 193: கலெக்டர் பூங்கொடி தகவல்

திண்டுக்கல் : ''திண்டுக்கல் தொகுதியில் 193 பதற்றமான ஓட்டுச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது'' என,திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி பேசினார்.பொதுத்தேர்தலை முன்னிட்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: 7 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 2.121 வாக்குச்சாவடிகளும், 9,06,644 ஆண் வாக்காளர்கள், 9,59,538 பெண் வாக்காளர்கள் 221 இதரர்கள் என மொத்தம் 18,66,403 வாக்காளர்கள் உள்ளனர். 193 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக உள்ளது. அதிக பதற்றமான ஓட்டுச்சாவடிகள் 147,பதற்றமான ஓட்டுச்சாவடிகள் 46 எனவும் கண்டறியப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதிகளுக்கும் தலா 3 பறக்கும்படை குழுக்கள், தலா 3 நிலையான கண்காணிப்புக் குழுக்கள்,தலா ஒரு வீடியோ கண்காணிப்பு குழுக்கள்,பழநி(கொடைக்கானல்) பகுதிக்கு தலா 3 பறக்கும்படை, 3 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், ஒரு வீடியோ கண்காணிப்புக்குழு என மொத்தம் 24 பறக்கும் படைகள், 24 நிலையனா கண்காணிப்புக் குழுக்கள், 8 வீடியோ கண்காணிப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.பழநி 24, கொடைக்கானல் பகுதிக்கு 20, ஒட்டன்சத்திரம் 30, ஆத்துார் 32, நிலக்கோட்டை 27, நத்தம் 33, திண்டுக்கல் 29, வேடசந்துார் 29 என மொத்தம் 217 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. புகார்கள் தெரிவிக்க தேர்தல் கட்டுப்பாட்டு அறையை,1800 599 4785 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்,0451-2400162, 0451-2400163, 0451-2400164, 0451-2400165 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் என்றார்.எஸ்.பி., பிரதீப், டி.ஆர்.ஓ., சேக்முகையதீன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, நேர்முக உதவியாளர்கள் கோட்டைக்குமார், ராஜேஸ்வரி, கனகவள்ளி மற்றும் தேர்தல் அலுவலர்கள் பங்கேற்றனர். தேர்தல் நடக்க உரிய ஒத்துழைப்பு வழங்க அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டது. வேட்புமனு தாக்கல், வாபஸ், மறுபரிசீலனை போன்றவை தொடர்பான விபரங்கள் விளக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி