உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / டீசல் திருடிய இருவர் கைது

டீசல் திருடிய இருவர் கைது

வேடசந்துார் : வேடசந்துார் சீத்தமரம் நால்ரோட்டில் தனியார் நுாற்பாலை செயல்படுகிறது. இங்கு பணிபுரியும் தொழிலாளர்களை வேலைக்கு அழைத்து வரவும்,வீட்டுக்கு அழைத்து செல்லவும் வேன்கள் நுாற்பாலை சார்பில் இயக்கப் படுகின்றன. முருநெல்லிக்கோட்டையை சேர்ந்த பொன்னுச்சாமி 34, கருப்பத்தேவனுாரை சேர்ந்த செந்தில்குமார் 39, இருவரும் 2 வண்டிகளில் டிரைவர்களாக உள்ளனர். இவர்கள் இருவரும் தினமும் கெண்டையகவுண்டனுார் நால்ரோட்டில் வேனை நிறுத்தி,லிட்டர் கணக்கில் டீசல் திருடினர். வேடசந்துார் எஸ்.ஐ., பாண்டியன் இருவரையும் கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ