உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / டூவீலர்- லாரி மோதல்: பலி 2

டூவீலர்- லாரி மோதல்: பலி 2

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் டூவீலரில் சென்ற கல்லுாரி மாணவர் உட்பட இருவர் சரக்கு லாரி மோதி பலியாயினர்.திண்டுக்கல் செங்குறிச்சியை சேர்ந்த கல்லுாரி மாணவர் கவுசிக்பாலாஜி 24. அதே பகுதியை சேர்ந்த இவரது உறவினர் சந்திரசேகரன் 25. இவர் ஒர்க் ஷாப்பில் வேலைபார்த்தார். இதில் கவுசிக்பாலாஜி , நேற்றுகாலை திண்டுக்கல் -பழநி ரோட்டில் உள்ள கல்லுாரிக்கு சந்திரசேகருடன் டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) சென்றார். சீலப்பாடி அருகே 8:30 மணிக்கு சென்ற போது திருச்சியிலிருந்து திண்டுக்கல் வந்த சரக்கு லாரி டூவீலரில் மோதியது. டூவீலர் ஓட்டிய சந்திரசேகரன் அங்கு இறந்தார். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்ககப்பட்ட கவுசிக்பாலாஜியும் இறந்தார். சரக்கு லாரி டிரைவர் தேனிமாவட்டம் போடி டொம்புச்சேரி சேதுராம் 34, என்பவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ