உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நெடுஞ்சாலை ஓரங்களில் கொட்டப்படும் கழிவுகள்... தடுக்கலாமே : நடவடிக்கை இன்றி தொடர்வதால் பெரும் பாதிப்பு

நெடுஞ்சாலை ஓரங்களில் கொட்டப்படும் கழிவுகள்... தடுக்கலாமே : நடவடிக்கை இன்றி தொடர்வதால் பெரும் பாதிப்பு

வேடசந்துார்:திண்டுக்கல் மாவட்டத்தில் நெடுஞ்சாலை ஓர பகுதிகளில் மருத்துவ கழிவு உட்பட பல்வேறு கழிவு பொருட்களை வாகனங்களில் கொண்டு வந்து கொட்டி செல்வதால் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. கழிவு பொருட்களை கொட்டி செல்வோரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையேல் கழிவுகளை கொட்டி செல்வதற்கான குறிப்பிட்ட பகுதிகளை மாவட்ட நிர்வாகம் தெளிவுபடுத்த வேண்டும்.திண்டுக்கல் - கரூர் நெடுஞ்சாலை வாகனங்கள் என போக்கு வரத்து நிறைந்த பகுதியாகும். இந்த ரோட்டில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தை தாண்டி சென்றால் செங்குளம் முதல் தாடிக்கொம்பு வரை கழிவு பொருட்களை தொடர்ந்து கொட்டி செல்கின்றனர். வேடசந்தூரை அடுத்து சென்றால் ரங்க மலை கணவாய் பகுதியில் கெட்டுப்போன முட்டை கழிவுகள், வீணான வெங்காயம், வாழை கழிவுகள், மின் சாதன கழிவுகள் ,காலாவதியான மருத்துவ கழிவுகளை கொட்டி செல்கின்றனர். இதே போல் தான் திண்டுக்கல்லில் இருந்து மதுரை, பழநி, நத்தம், வடமதுரை உள்ளிட்ட நகர் பகுதிகளுக்கு செல்லும் நெடுஞ்சாலை ஓரங்களிலும் கழிவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகின்றன. டூவீலர்களில் செல்பவர்களுக்குதான் தெரியும். எவ்வளவு துர்நாற்றத்தை தாங்கி செல்ல வேண்டி உள்ளது என்பது. வாகனங்களில் கொண்டு வந்து கொட்டுவது ஒரு புறம் இருக்க நகர் பகுதிகளில் வீடுகளில் உள்ளோரும் கழிவு பொருட்களை டூ வீலர் உள்ளிட்ட வாகனங்களில் கொண்டு ரோட்டோர்களில் கொட்டி வருகின்றனர். இதை அந்தந்த ஊராட்சி, பேரூராட்சி நிர்வாகங்கள்,நெடுஞ்சாலை துறை கண்காணித்து வாகனங்களில் கொண்டுவந்து கழிவுகளை கொட்டுவோர் மீது போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், இலகு, கனரக வாகன உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், உள்ளாட்சி நிர்வாகங்கள் என அனைவரையும் அழைத்து பேசி போதி அறிவுரை வழங்கவேண்டும். இதோடு இவற்றை அவ்வப்போது அப்புறப்படுத்தவும் வேண்டும். அனைத்து ஊராட்சி, பேரூராட்சி களுக்கும் பேட்டரி வாகனங்கள் உள்ள நிலையில் கழிவுகளை அகற்றி ரோட்டோரங்கள் குப்பை கடாய் மாறி வருவதை தடுக்க வேண்டும்.

கேள்விக்குறியாகும் சுகாதாரம்

நெடுஞ்சாலை ஓரங்களில் வாகனங்களில் வந்து கழிவுப்பொருட்களை கொட்டி வருகின்றனர். இவற்றை இன்னும் தடுக்க முடிய வில்லை. மழைக்காலங்களில் துர்நாற்றம் வீசுகிறது. இதை கண்காணிக்க மாவட்ட அதிகாரிகள் டூவீலரில் சுற்றிவர வேண்டும். அப்போதுதான் துாய்மை, பொதுமக்களின் சிரமம் என்னவென்று தெரியவரும். ரோட்டோரங்களில் கழிவு பொருட்கள் கொட்டுவதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கழிவுகளை அந்தந்த ஊராட்சி, பேரூராட்சி நிர்வாகங்கள் முறைப்படி பிரித்தெடுத்து சுழற்சி முறையில் உரமாக்க வேண்டும். இல்லையேல் திண்டுக்கல் மாவட்டத்தின் சுகாதாரம் கேள்விக்குறியாக மாறிவிடும் -ஆர்.பூபதி, சமூக ஆர்வலர், செங்குளத்துப்பட்டி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை