உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  ஏரிச்சாலையில் கழிவு நீர்

 ஏரிச்சாலையில் கழிவு நீர்

கொடைக்கானல்: கொடைக்கானல் ஏரிச்சாலையில் மழை நீரில் கழிவு நீர் கலந்து சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. கொடைக்கானலின் இதயமாக இருப்பது ஏரியாகும். சுற்றுலா பயணிகள் இங்கு குதிரை, சைக்கிள் ,படகு சவாரி செய்வது வழக்கம். காலை, மாலையில் பயணிகள்,உள்ளூர்வசிகள் நடைபயிற்சியில் ஈடுபடுவர். சுற்றுலாத் துறை படகு குழாம் அருகே உள்ள மின்னனு கழிப்பறை பயனற்று காட்சி பொருளாக உள்ளது. இதனருகே நகராட்சி குப்பைத் தொட்டிகளையும் அமைத்துள்ளது. பிரையன்ட் பூங்கா தவிர்த்து ஏனைய இடங்களில் கழிப்பறை வசதியில்லாத சூழலில் மின்னனு கழிப்பறை மறைவிடத்தை பயணிகள் இயற்கை உபாதைக்கு பயன்படுத்தும் போக்குள்ளது. அருகாமையிலே குதிரை சவாரி மைய எச்சம்,மழைநீர், கழிவு நீர் கலந்து இவ்விடம் துர்நாற்றம் வீசி சுகாதாரக்கேடாக உள்ளது. இதை கடந்து செல்லும் பயணிகள் முகம் சுளிக்கின்றனர். குப்பை சரிவர அள்ளப்படாமல் அலங்கோலமாக உள்ளது. சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த ஏரிச்சாலையில் நீடிக்கும் சுகாதாரக்கேட்டை நகராட்சி சீர் செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை