உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஏன் இந்த அலட்சியம்.. பாதயாத்திரை பக்தர்களுக்கு இல்லை பாதுகாப்பு

ஏன் இந்த அலட்சியம்.. பாதயாத்திரை பக்தர்களுக்கு இல்லை பாதுகாப்பு

பழநி முருகன் கோயில் தைப்பூச திருவிழா ஜன.19ல் துவங்க உள்ள நிலையில் பழநிக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் அதிகளவில் திண்டுக்கல் மாவட்ட சாலை வழியாக வந்த வண்ணம் உள்ளனர். பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் சாலையின் இடது ஓரத்தில், பக்தர்களுக்கென ஒதுக்கப்பட்ட பாதையில் நடந்து வர வேண்டும். ஆனால் சில பகுதிகளில் நடை பாதை வசதியின்றி பக்தர்கள் சிலர் சாலையின் நடுவில் நடந்து வருகின்றனர். போலீசார் பாதயாத்திரை வரும் பக்தர்களின் பாதைகளில் ரோந்து பணியை தீவிரப்படுத்தி அவர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். இரவு நேரங்களில் ஒளிரும் பட்டைகள் , டார்ச் லைட் உதவியுடன் எதிரே, பின்புறம் வரும் வாகனங்களுக்கு சமிக்கை அளித்த வண்ணம் வரவேண்டும். தங்குமிடங்களில் தங்களுடைய பொருட்களை பாதுகாப்புடன் வைத்துக் கொள்ள வேண்டும்.பிரச்னை ,சிரமம் ஏற்படும் நிலையில் அருகில் உள்ள போலீசார் உதவ வேண்டும். பழநி வரும் பாதையில் பயணிக்கும் பஸ்கள், கனரக வாகனங்கள் அதிக வேகத்தில் வருவதையும் போலீசார் கண்காணிக்க வேண்டும். இரவு 10 :00 மணிக்கு பாத யாத்திரை செல்ல அனுமதி இல்லாத நிலையில் இந்த நேரத்தில் பக்தர்கள் தவிர்க்க வேண்டும்.இது குறித்தும் போலீசார் கண்காணித்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். சண்முக நதி, இடும்பன் குளம் பகுதி உள்ளிட்ட நீர் நிலைகளில் பக்தர்கள் குளிக்கும்போது பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இதற்கும் கோயில் நிர்வாகம் போதிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி