உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அந்தியூர் குட்டி யானைக்கு வண்டலூரில் பெயர் சூட்டல்

அந்தியூர் குட்டி யானைக்கு வண்டலூரில் பெயர் சூட்டல்

ஈரோடு: அந்தியூரில் இருந்து வண்டலூருக்கு கொண்டு செல்லப்பட்ட குட்டி யானைக்கு, 'முரளி' என்ற பெயர் சூட்டப்பட்டது. அந்தியூர், சென்னம்பட்டி காப்புக்காட்டில் இருந்து வழி தவறிய குட்டியானை, ஜரத்தல் ஏரிக்கரை அருகே பரிதாபமாக நின்றது. ஒன்றரை மாதமேயான குட்டி யானையை, காட்டுக்குள் அனுப்ப வனத்துறையினர் மேற்கொண்ட முயற்சிகள் யாவும் தோல்வியிலேயே முடிந்தது. இதனால், மண்டல வனப் பாதுகாவலர் அருண் உத்தரவின் பேரில், வனத்துறை அலுவலகத்துக்கு கொண்ட வரப்பட்ட குட்டியானைக்கு, ராஜ உபச்சாரம் நடந்தது. வனத்துறை அலுவலர்களிடம் குழந்தை போல பழகிய குட்டியானை, 29ம் தேதி இரவு 8.30க்கு நீண்ட நேர பாசப் போராட்டத்துக்கு பின், சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு செல்லப்பட்டது. ஈரோடு மாவட்டம் சென்னம்பட்டியில் இருந்து மீட்கப்பட்டதால், 'சென்னப்பன்' என்ற பெயரை மாவட்ட வனத்துறையினர், குட்டி யானைக்கு பெயர் சூட்டினர். வண்டலூர் பூங்காவில் பராமரிக்கப்படும் குட்டியானைக்கு பெயர் வைக்க, வண்டலூர் பூங்கா அதிகாரிகள் முடிவெடுத்தனர். நீண்ட நாள் ஆலோசனைக்கு பின், அந்தியூர் குட்டி யானைக்கு, 'முரளி' என்ற பெயரை வண்டலூர் அதிகாரிகள் சூட்டியுள்ளனர். வண்டலூர் அதிகாரிகள் தெரிவிக்கையில், ''பூங்கா ஊழியர்களிடம், குட்டியானை, 'முரளி' முதலில் பழக மறுத்தது. தற்போது, அவர்களிடமும், மற்ற யானைகளிடமும் சகஜமாக பழகி வருகிறது. மற்ற பெரிய யானைகளைக் காட்டிலும், குட்டி யானைக்கு சத்தான ஆகாரங்கள் வழங்கப்படுவதால், திடகாத்திரமாக உள்ளது,'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை