உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நில மோசடி வழக்கு ஈரோட்டில் 4 பேர் கைது

நில மோசடி வழக்கு ஈரோட்டில் 4 பேர் கைது

ஈரோடு: நில மோசடி வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். ஈரோடு மாவட்டம் பாலகவுண்டன்பாளையத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு 46-புதூரில் 5.29 ஏக்கர் நிலம் உள்ளது. அதில், 30 சென்ட் நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் மோகன், லோகநாதன், பாலசுப்பிரமணியன் ஆகிய மூவரும், பத்திர எழுத்தாளர் பாலசுப்பிரமணியன் உதவியுடன் போலி பத்திரம் தயாரித்து, அசோக் நகரைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருக்கு விற்றுள்ளனர். ஈரோடு குற்றவியல் நீதிமன்றத்தில் ரமேஷ் மனு கொடுத்தார். நீதிமன்ற உத்தரவுப்படி, ஐந்து பேர் மீதும் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர். ஐந்து பேரும் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தனர். மாவட்ட முதன்மை நீதிபதி ஜெயசங்கரன் முன் இவர்கள் நேற்று ஆஜராகினர். நிலமோசடியில் ஈடுபட்ட மோகன், லோகநாதன், பாலசுப்பிரமணியன், பத்திர எழுத்தர் பாலசுப்பிரமணியன் ஆகியோரை கோவை சிறையில் 15 நாட்கள் அடைக்கவும், ராமச்சந்திரனுக்கு ஜாமீன் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை