உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / டாக்டர் வீட்டில் திருட்டு மேலும் ஒருவர் கைது

டாக்டர் வீட்டில் திருட்டு மேலும் ஒருவர் கைது

ஈரோடு: ஈரோடு, சஞ்சய் நகர், ராணி வீதியை சேர்ந்த ஹோமியோபதி டாக்டர் ராணி சுப்ரியா, 42; இவரது வீட்டில், ஜூலை, 30ம் தேதி இரவு, 219 பவுன் நகை, 55 ஆயிரம் ரொக்கம், 25 கிராம் வெள்ளி பொருள் திருட்டு போனது.இதுதொடர்பாக வீரப்பன்சத்திரம் போலீசார், ஏற்கனவே இருவரை கைது செய்து, 150 பவுன் நகையை பறிமுதல் செய்தனர். தலைமறைவான சென்னை, அம்பத்துார் பகுதியை சேர்ந்த நரேந்திரன், 21, என்பவரை திருப்பூரில் கைது செய்தனர். அவரிடம் இருந்து, 66.5 பவுன் நகை, 25 கிராம் வெள்ளி பொருட்களை மீட்டனர். நரேந்திரன் மீது, 10க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் போலீஸ் ஸ்டேஷனில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ