உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

ஈரோடு : ஈரோடு மாநகராட்சியில், 290க்கும் மேற்பட்ட காலி பணியிடங்-களை நிரப்ப, தமிழ்நாடு துாய்மை பணியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து துணை ஆணையர் சரவ-ணக்குமாரிடம், சங்கம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் கூறி-யிருப்பதாவது: கொரோனா சிறப்பு நிதி, 15 ஆயிரம் ரூபாயை, அனைத்து துாய்மை பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும். குழு பணியாளர் அனைவருக்கும் ஈ.பி.எப்., பிடித்தம் செய்ய வேண்டும். ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு உடனே ஓய்வூ-தியம், பணிக்கொடையை வழங்க வேண்டும். அரசாணைப்படி அகவிலை படி உயர்வு, நிலுவைத்தொகை வழங்க வேண்டும். 2014க்கு பிறகு, 290க்கும் மேற்பட்ட நிரந்தர பணியாளர் ஓய்வு பெற்றுள்ளனர். அந்த காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். இவ்வாறு மனுரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை