உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குறைதீர் கூட்டத்தில் 325 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 325 மனுக்கள் ஏற்பு

ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடந்தது. இதில் மகளிர் உரிமை தொகை, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, மாற்றுத்திறனாளிக்கு உதவித்தொகை உட்பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 325 மனுக்கள் பெறப்பட்டன. அன்னை சத்யா நகர், நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்போர் நலச்சங்கத்துக்கான, 3 மாத இணை மானியத்தொகை, 3.36 லட்சம் மற்றும் சங்க பதிவு செய்தமைக்கான பதிவு கட்டணம், 5,100 ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. கூட்டத்தில் டி.ஆர்.ஓ., சாந்தகுமார், பயிற்சி உதவி கலெக்டர் ராமகிருஷ்ணசாமி, சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் செல்வராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ராஜகோபால், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார் மனுக்களை பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ