உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மறியலில் ஈடுபட முயன்ற கம்யூ., கட்சியினர் கைது

மறியலில் ஈடுபட முயன்ற கம்யூ., கட்சியினர் கைது

ஈரோடு, மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. புயல், வெள்ளம் பாதிப்பு நிவாரணம், மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.உயர் கல்விக்கான ஒதுக்கீட்டில், 10,000 கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கம்யூ., கட்சிகள் சார்பில் ஈரோட்டில் நேற்று மறியல் அறிவிக்கப்பட்டது. இதற்காக அரசு மருத்துவமனை ரவுண்டானாவில் இருந்து டெலிபோன் பவன் நோக்கி புறப்பட்ட, 70 பெண்கள் உட்பட, 333 பேரை போலீசார் கைது செய்தனர். மா.கம்யூ., மாநில செயற்குழு உறுப்பினர் முத்துகண்ணன், மாவட்ட செயலாளர் ரகுராமன், இ.கம்யூ., தெற்கு மாவட்ட செயலாளர் பிரபாகரன், வடக்கு மாவட்ட செயலாளர் மோகன்குமார், சி.பி.ஐ.., எம்.எல்., பொறுப்பாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ