உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஹோட்டல் பண்டங்களில் கலப்படம்

ஹோட்டல் பண்டங்களில் கலப்படம்

ஈரோடு: ஹோட்டல் பண்டங்களில், கலப்படம் அதிகரிப்பால், மக்கள் பல்வேறு நோய்க்கு ஆளாகின்றனர். ஈரோட்டில் சில ஹோட்டல்களில் மட்டுமே விலைப்பட்டியல் வைத்துள்ளனர். விலைவாசியை காரணம் காட்டி பலரும், ஹோட்டல் பண்டங்கள் விலையை தாறுமாறாக உயர்த்தி விற்பனை செய்கின்றனர். டீக்கடைகள் முதல் பெரிய ஹோட்டல்கள் வரை டீ, காஃபியில்தான் கலப்படம் அதிகம். அரிசியுடன் ரேஷன் அரிசியை அதிகமாக கலக்கின்றனர். பாதுகாக்கப்பட்ட குடிநீருக்கு பதிலாக கடினநீர் பயன்படுத்துவது என ஒவ்வொன்றிலும் கலப்படம் தாராளம். மாவட்ட நிர்வாகம், நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கலப்படத்தை முழுமையாக ஓழிக்க முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை