உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / டூவீலர் திருடிய 2 பேர் கைது

டூவீலர் திருடிய 2 பேர் கைது

காங்கேயம்: காங்கேயம் உடையார் காலனியை சேர்ந்த சீனி முகமது மகன் அன்வர் பாட்ஷா, 25; நேற்று முன்தினம் அதிகாலை டூவீலரில் வெளியே சென்றார். சிறிது துாரம் சென்ற நிலையில் இருவர் வழிமறித்துள்ளனர். விபரம் கேட்பதற்காக பைக்கை நிறுத்தியபோது, அரிவாளை எடுத்து மிரட்டினர். அவர் ஓட்டி வந்த பைக்கை பறித்து தப்பினர். இதுகுறித்து காங்கேயம் போலீசில் புகாரளித்தார். இது தொடர்பாக ஈரோடு, சூரம்பட்டி வலசை சேர்ந்த பவித்ரன், 22; ஈரோடு, சாஸ்திரி நகரை சேர்ந்த ராஜசேகர், 22, ஆகியோரை நேற்று கைது செய்தனர். இருவரும் வேறு எங்கேனும் கைவரிசை காட்டியுள்ளனரா என்பது குறித்து விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ