உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆடி கிருத்திகை வழிபாடு

ஆடி கிருத்திகை வழிபாடு

ஈரோடு: ஆடி கிருத்திகையை ஒட்டி, திண்டல் வேலாயுத சுவாமி கோவிலில், இரண்டாவது நாளாக நேற்று சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. தங்க கவசத்தில் சுவாமி அருள்பாலித்தார். அதன்பின், மயில் வாகனத்தில் வீதியுலா நடந்தது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் கொல்லம்பாளையம் ரயில்வே காலனி மீனாட்சி சுந்தரேஸ்வர், பாலமுருகன் கோவிலில் நேற்று காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது.காவிரிக்கரை சோழீஸ்வரர் கோவிலில், சுப்பிர-மணியருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ