உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அந்தியூர் அரசு பள்ளி ஹெச்.எம்., விபத்தில் பலி

அந்தியூர் அரசு பள்ளி ஹெச்.எம்., விபத்தில் பலி

அந்தியூர்:அந்தியூர், தவிட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார், 52; எண்ணமங்கலம் அருகே குரும்பபாளையம் மேடு அரசு ஆண்கள் பள்ளி தலைமை ஆசிரியர். நேற்று அதிகாலை, 4:00 மணியளவில் ஆக்டிவா மொபட்டில், அந்தியூர் - அத்தாணி சாலையில் சென்றார். தீயணைப்பு நிலையம் அருகே திரும்பும் போது, சாலையோர மரத்தில் மொபட் மோதியதில் பலத்த காயமடைந்தார். அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து அந்தியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !