உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாநகராட்சியில் வரி விதிப்பு செய்யாத பகுதிகள் தனியார் நிறுவனம் மூலம் விரைவில் கள ஆய்வு

மாநகராட்சியில் வரி விதிப்பு செய்யாத பகுதிகள் தனியார் நிறுவனம் மூலம் விரைவில் கள ஆய்வு

ஈரோடு, ஈரோடு மாநகராட்சி, 109.52 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது. பல பகுதிகளில் வணிகம் மற்றும் தொழிற்சாலை கட்டடங்கள், உரிய வகையில் வரி விதிப்பு செய்யப்படாமல் உள்ளன. குறிப்பாக மாநகராட்சி பகுதிகளில், 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருப்பதால், வரி செலுத்துவது குறித்து, அவர்ளுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. இந்நிலையில் மாநகராட்சி வருவாயை அதிகரிக்கும் வகையிலும், வருவாய் இழப்பை தவிர்க்கும் வகையிலும், வரி விதிப்பு செய்யப்படாத பகுதிகள் மற்றும் உரிய வகையில் வரி விதிப்பு செய்யப்படாத வணிக நிறுவனங்களில், மாநகராட்சி நிர்வாகம் ஆய்வு செய்து வருகிறது. இதுகுறித்து மாநகராட்சி வருவாய் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:மாநகராட்சியில் வரி விதிப்பு செய்யப்படாத பகுதிகளில், ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. ஆய்வு முடிவுக்கு பின், இதுவரை வரி செலுத்தாதவர்களை வரி செலுத்த அறிவுறுத்தப்படும். ஏராளமான வணிகம் மற்றும் தொழிற்சாலை கட்டடங்கள் குறைந்த வரி விதிப்பு செய்தும், வரி விதிப்பே செய்யாமலும் பயன்பாட்டில் உள்ளது. உரிமையாளர்கள் தாமாக முன்வந்து உரிய வரி விதிப்பு செய்து கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் நிறுவனம் மூலம் கள ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் அனைத்து கட்டடங்களும் வரி விதிப்புக்கு உட்படுத்தப்படும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை