உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கும் முயற்சி தோல்வி

ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கும் முயற்சி தோல்வி

அந்தியூர் : அந்தியூர் அருகே மைக்கேல்பாளையம் பஞ்., கிணத்தடியில், வனப்பகுதி அடிவாரத்தில், வருவாய் துறைக்கு சொந்தமான, 3.5 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது.இந்நிலத்தை மீட்க மூன்றாவது முறையாக, அந்தியூர் தாசில்தார் கவியரசு தலைமையில், 30க்கும் மேற்பட்ட போலீசார், தீய-ணைப்பு துறையினர், நான்கு ஜே.சி.பி., இயந்திரங்களுடன் நேற்று வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐந்து பெண்கள், மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்இதனால் வருவாய் துறையினர், ஆக்கிரமிப்பை அகற்றாமல் திரும்பி விட்டனர். அதேசமயம் நீதிமன்றத்தில் இந்த நிலத்தின் ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கு, பைசல் செய்யப்பட்டுள்ளது. இதனால் நிலத்தை மீட்காமல் விடமாட்டோம் என்றும் தெரிவித்-துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ