உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / டிரிப்ஸ் நீடிலை அகற்றிய துாய்மை பணியாளர் அரசு மருத்துவமனையில் அடுத்த சர்ச்சை

டிரிப்ஸ் நீடிலை அகற்றிய துாய்மை பணியாளர் அரசு மருத்துவமனையில் அடுத்த சர்ச்சை

ஈரோடு, : ஈரோடு அரசு மருத்துவமனை உள் நோயாளி பிரிவில், ஒரு துாய்மை பணியாளர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு ஒரு நோயாளிக்கு, பாட்டிலில் இறங்கிய குளுக்கோஸ் (டிரிப்ஸ்) தீர்ந்து விட்டதால், நீடில் வழியாக ரத்தம் வெளியாகும் நிலை ஏற்பட்டது. இதை பார்த்த துாய்மை பணி-யாளர், நோயாளியின் கையில் இருந்த நீடிலை அகற்றியுள்ளார். இதை ஒருவர் மொபைல்போனில் வீடியோ எடுத்து வலைத-ளத்தில் பதிவிட்டது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இதுபற்றி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் கூறியதாவது: அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், செவிலியர் தவிர வேறு யாரும் நோயாளிகளுக்கு ஊசி செலுத்துதல், மருந்து போடுதல், குளுக்கோஸ் ஏற்றுதல் உள்ளிட்ட பணிகளை செய்யக்-கூடாது. ஆனால், துாய்மை பணியாளர் குளுக்கோஸ் பாட்டிலை மாற்றி-விட்ட நிகழ்வு எவ்வாறு நடந்தது என தெரியவில்லை. எப்போது எடுத்த வீடியோ என தெரியவில்லை. சம்மந்தப்பட்ட நாளில் பணியில் இருந்த டாக்டர், செவிலியர், மருத்துவ பணியாளர்க-ளிடம் விசாரணை நடத்தி, தவறு செய்திருந்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினார். கடந்த மாதம் ஸ்ட்ரெச்சர் கிடைக்காததால், தாயை மகள் துாக்கி சென்ற வீடியோவால், ஈரோடு அரசு மருத்துவமனை நிர்வா-கத்தின் மீது சர்ச்சை வெடித்தது. இந்நிலையில் அடுத்த சர்ச்சை கிளம்பியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ