உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு

பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு

கொடுமுடி: கொடுமுடி வட்டார வள மையத்துக்கு உட்பட்ட அரசு தொடக்கப்பள்ளிகளில் முதற்கட்டமாக, 29 தொடக்கப்பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு நடந்தது.இதன்படி தாமரைப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடந்த நிகழ்வில், பள்ளி ஆசிரியர், பெற்றோர், முன்னாள் மேலாண்மை குழு உறுப்பினர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். நிகழ்வின் இறுதியில் தேர்வு செய்யப்பட்ட பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு சான்று வழங்கப்பட்டு, குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ