உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஊரக வளர்ச்சி துறை அலுவலர் ஆர்ப்பாட்டம்

ஊரக வளர்ச்சி துறை அலுவலர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியசங்கர் என்பவரை, எவ்வித காரணமும் இன்றி, கலெக்டர் ஜெயசீலன் பணியில் இருந்து விடுவித்துள்ளார்.கலெக்டரின் ஊழியர் விரோத போக்கை கண்டித்தும், மீண்டும் அவருக்கு பணியிடம் வழங்க கோரி, மாநில அளவில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.இதன்படி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட தலைவர் ரவிசந்திரன் தலைமை வகித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !