உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / லோக் அதாலத்தில் 1,909 வழக்குகளுக்கு தீர்வு

லோக் அதாலத்தில் 1,909 வழக்குகளுக்கு தீர்வு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் அனைத்து நீதிமன்றங்களிலும் லோக் அதாலத் நேற்று முன்தினம் நடந்தது. ஈரோட்டில் நடந்த லோக் அதாலத்துக்கு, முதன்மை நீதிபதி முருகேசன் முன்னிலை வகித்தார். இதில், 6,056 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 1,909 வழக்குகளுக்கு, 25.௭௦ கோடி ரூபாய் மதிப்பில் தீர்வு காணப்பட்டது. மோட்டார் வாகன விபத்து வழக்கில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு, 30.85 லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகை கிடைத்தது. குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நான்கு வழக்குகளில் கணவன், மனைவி சேர்ந்து வாழ்வதாக ஒப்புக்கொண்டு இணைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை