உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கும்பாபிஷேக விழா

கும்பாபிஷேக விழா

ஈரோடு: ஈரோடு, காரைவாய்க்காலில் சிறு ஐயப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சிறு ஐயப்பா சேவா நலச்சங்கம் சார்பில் திருப்ப-ணிகள் நடந்தது. பணிகள் முடிந்த நிலையில், நேற்று மகா கும்பா-பிஷேக விழா நடந்தது.* சத்தியமங்கலத்தில், பவானி ஆற்றங்கரையோரத்தில், வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த, ௯ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. நேற்று காலை நான்காம் காலயாக பூஜையை தொடர்ந்து, பிள்ளையார்-பட்டி ஸ்ரீலஸ்ரீ பிச்சை குருக்கள் தலைமையில் கும்பாபிஷேக விழா நடந்தது.இதேபோல் சத்தியமங்கலம் கடைவீதி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில், கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. சிவமூர்த்தி குருக்கள், பாலாஜி சிவம் தலைமையில் நடந்தது. இதை தொடர்ந்து சுவாமி திருவீதி உலா புறப்பாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ