உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வெறிநாய்கள் கடித்து 10 ஆடுகள் பலி

வெறிநாய்கள் கடித்து 10 ஆடுகள் பலி

காங்கேயம்: காங்கேயம், பழையகோட்டை ரோடு, மூர்த்திரெட்டிபாளை-யத்தை சேர்ந்தவர் ஜெகநாதன், 45; காய்கறி கடை நடத்தும் இவர், ஆடு வளர்ப்பிலும் ஈடுபட்டுள்ளார். நேற்று முன்தினம் மாலை மேய்ச்சல் முடிந்து, தோட்டத்து பகுதியில் பட்டியில் ஆடுகளை கட்டி வைத்திருந்தார்.நேற்று காலை சென்றபோது பல ஆடுகள் இறந்து கிடந்தன. சில ஆடுகள் துடித்தபடி கிடந்தன. வெறி நாய்கள் கடித்ததில், ௧௦ ஆடுகள் பலியான நிலையில், கவலைக்கிடமாக கிடந்த ஏழு ஆடுகளுக்கு, காங்கேயம் கால்நடை மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். இறந்த ஆடுகளின் மதிப்பு, 1.௨௦ லட்சம் ரூபாய் இருக்கும். எனவே ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை எழுந்தது. இதனால் வருவாய் துறையினர் ஆய்வில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை