உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கிடாரி கன்றுகளை உருவாக்க 14,000 உறை விந்து ஊசி ரெடி

கிடாரி கன்றுகளை உருவாக்க 14,000 உறை விந்து ஊசி ரெடி

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், கிடாரி கன்றுகளை உருவாக்க, 14,000 உறை விந்து ஊசிகள் தயாராக உள்ளன.இதுபற்றி கால்நடை பராமரிப்பு மண்டல இணை இயக்குனர் பழனிவேலு கூறியதாவது: கால்நடை துறை சார்பில் பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், பாலினம் பிரிக்கப்பட்ட உறை விந்து ஊசிகள் மூலம் செயற்கை முறை கருவூட்டல் செய்யும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் கிடாரி கன்றுகளை அதிகமாக ஈன்று, பசு மாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கிறோம். இதற்காக மரபணு திறன் கொண்ட ஊசி செலுத்தப்படுகிறது. ஒரு ஊசியின் விலை, 737 ரூபாய். அரசு மானியம் மானியம் வழங்குவதால், 160 ரூபாய்க்கு வழங்குகிறோம். இதன்படி ஈரோடு மாவட்டத்தில் தற்போது, 14,829 உறை விந்து ஊசிகள் தயாராக உள்ளன. தவிர, 5,000 உறை விந்து ஊசி ஏற்கனவே கறவை மாடுகளுக்கு செலுத்தப்பட்டுள்ளன. விவசாயிகள், கால்நடை வளர்ப்போார், கால்நடை மருத்துவமனை, கால்நடை மருந்தகங்களில் மானியத்துடன் இத்திட்டத்தில் பயன் பெறலாம். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ