உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 191 பதற்றமான பூத்களுக்கும் நுண் பார்வையாளர் நியமனம்

191 பதற்றமான பூத்களுக்கும் நுண் பார்வையாளர் நியமனம்

ஈரோடு;ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், பதற்றமான ஓட்டுச்சாவடிகளை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட எல்.ஐ.சி., - தபால் அலுவலகம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அலுவலர் என, 230 தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கு முதல் நிலை பணி ஒதுக்கீடு, தேர்தல் பொது பார்வையாளர் ராஜீவ் ரஞ்சன் மீனா முன்னிலையில் நடந்தது.கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்து, கணினி சுழற்சி மூலம் ஒதுக்கீடு செய்தார்.ஈரோடு கிழக்கில், 237 ஓட்டுச்சாவடியில், 14; ஈரோடு மேற்கில், 302ல், 30; மொடக்குறிச்சியில், 277ல் 22; பெருந்துறையில், 264ல் 10; பவானியில், 289ல் 23; அந்தியூரில், 262ல் 38; கோபியில், 296ல் 45; பவானிசாகரில், 295ல் 9; என, 2,222 ஓட்டுச்சாவடியில், 191 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன.ஓட்டுப்பதிவு நாளில் இந்த பூத்களில் எல்.ஐ.சி., - தபால் அலுவலகம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அலுவலர்கள் என, 191 பேர், 20 சதவீதம் கூடுதல் நபராக, 39 பேர் என, 230 தேர்தல் நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கான முதல் நிலை பணி ஒதுக்கீடு, கணினி மூலம் சுழற்சி முறையில் நிறைவு செய்து, விரைவில் பயிற்சி வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி